திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவருக்கு நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததே காமராஜ் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறிய அவரது உறவினர்கள், பணியில் இருந்த பெண் மருத்துவர் பிரபாவை தாக்கினர்.
பணியை புறக்கணித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்! - govt hospital
திருவாரூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை
இதனையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.