தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிகளுக்கு தடையின்றி செல்லவும், வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க ஆறு, கால்வாய், வடிகால் போன்ற நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதனை கண்காணிக்க வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி, தூர்வாரும் பணிகள் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தில் செல்லும் முல்லைவாசல் வாய்க்கால், ரெகுனாதபுரம் பகுதி வாய்க்கால்களில் சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், கோரை ஆறு பகுதியில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை சிறப்பு அதிகாரி ராஜேஷ் லக்கானி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதேசமயம் அப்போது ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டுக்களைக் கொண்டு ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டுமென சிறப்பு அதிகாரி ராஜேஷ் லக்கானி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
இதையும் படிங்க: பச்சை மஞ்சள் கருமுட்டை: கேரள கோழியால் வியந்த விஞ்ஞானிகள்!