திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி காமராஜர் காலனியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளர்களான இவர்கள் கூடுதல் வருமானத்திற்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளதால் நேற்று (ஜுன்.11) ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றுள்ளன. பின்னர் மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு உரிமையாளர்களிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.