தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்விசிறி பட்டனை ஆன் செய்த சிறுமி: மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

திருவாரூர்: மின்விசிறியை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

girl dies of electric shock in tiruvarur
girl dies of electric shock in tiruvarur

By

Published : Oct 12, 2020, 2:12 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்ணாமலை நகர் சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் கோபி. இவருடைய மனைவி கெளரி. இவர்களுக்கு ஷீபா (11) என்ற மகள் உள்ளார்.

நேற்று (அக்.11) ஷீபாவின் தாய் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது ஷீபா அவருக்காக வீட்டிலிருந்த மின் விசிறியின் பட்டனை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலயே சிறுமி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மன்னார்குடி காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...சாலைபோடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details