திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் மணிகண்டன் என்ற காவலர் பணி புரிந்துவருகிறார். இவர் நேற்று இரவு திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் உள்ள முடிகொண்டான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி சோதனையிட முயன்றார். அப்போது அவர்கள் திடீரென சாலைகளில் இருந்த கற்களை எடுத்து மணிகண்டன் மீது வீசி தாக்கியுள்ளனர்.
காவலருக்கு கல் வீசிய 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! - நன்னிலம் காவல் நிலையம்
திருவாரூர்: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மூன்று பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தீவரிமாக தேடிவருகின்றனர்.
இதில் நிலைகுலைந்த மணிகண்டன் தலையில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு, மூவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நன்னிலம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கல் வீச்சில் ஈடுபட்ட நபர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, வாகன பதிவு எண் கொண்டு விசாரணை செய்ததில், அந்த இருசக்கர வாகனம் கடந்த 21ஆம் தேதி மன்னார்குடி பகுதியில் காணாமல் போன இரு சக்கர வாகனம் என தெரியவந்துள்ளது.