தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி - Corona for another one in Tiruvarur

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை புதிதாக ஒரு நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் கரோனா வைரஸ் 32ஆக உயர்வு
திருவாரூரில் கரோனா வைரஸ் 32ஆக உயர்வு

By

Published : May 6, 2020, 4:45 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இவரை பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது .

தற்போது அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31லிருந்து 32ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூரில் கரோனா வைரஸ் 32ஆக உயர்வு

அதில், இதுவரை 24 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர். மீதமுள்ள 7 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் மேலும் ஒரு நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் கரோனா தொற்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே ஒரு நபர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிரான வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details