தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 4 பேர்! - திருவாரூரில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 4 பேர்

திருவாரூர்: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

திருவாரூரில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 4 பேர்!
திருவாரூரில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 4 பேர்!

By

Published : Apr 29, 2020, 3:54 PM IST

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரும் கரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரும் என நான்கு பேர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து குணமடைந்த நால்வரையும் அமர வைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர் உற்சாகமாக கைத்தட்டி வீடுகளுக்கு தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

மேலும் குணமடைந்து வீட்டிற்கு திரும்புபவர்கள் அடுத்த 14 நாள்கள் தனிமையில் இருக்கும்படி மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details