தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலத்தில் 100 விழுக்காடு மானிய பண்ணைக்குட்டை - fish pool

திருவாரூர்: விவசாய நிலத்தில் 100 விழுக்காடு மானியத்தில் பயிர்களுக்கு வறட்சி காலங்களில் உயிர் பாசனமாக மாறும் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பண்ணைக்குட்டை

By

Published : Jul 27, 2019, 3:57 PM IST

தமிழ்நாடு அரசு விவசாயிகள் நிலத்தில் உயிர் பாசனம் என்ற அடிப்படையில் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு 100 விழுக்காடு மானியம் அளித்து வருகிறது. இதனையடுத்து, திருவாரூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த மகேஷ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் நூறு விழுக்காடு மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்துள்ளார்.

இதன் மூலம் தண்ணீர் இல்லாத வறட்சி காலங்களில் உயிர் பாசனமாக பயிர்களுக்கு இந்த தண்ணீர் பயன்படுவதாக கூறினார். மேலும் இந்த பண்ணைக்குட்டையில் மீன்களை வளர்ப்பதால் அதன் வாயிலாக வருவாய் கிடைப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி உட்பட அனைத்து வட்டாரங்களிலும் 1520 பண்ணைக்குட்டைகள் ரூபாய் 15.20 கோடி நிதி செலவில் நூறு விழுக்காடு மானியத்தில் விவசாயிகளுக்கு அமைக்கப்பட உள்ளன.

மானிய பண்ணைக்குட்டை

அதுமட்டுமின்றி, விவசாயிகள் தங்கள் நிலத்தில் 100 விழுக்காடு மானியத்தில் பண்ணைகுட்டைகள் அமைக்க எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் எனவும் திருவாரூர் வேளாண் பொறியாளர் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில், விவசாய நிலத்தில் 100 விழுக்காடு மானியத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details