திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு, மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக மக்களை பாதுகாக்கின்ற ஆட்சியாக அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட 13,500 ஹெக்டேர் என்கின்ற அளவை 20 ஆயிரமாக உயர்த்தியதால், விவசாயிகளின் மத்தியில் முதலமைச்சர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
’ஓசி ரயில் ஸ்டாலின்' - அமைச்சர் காமராஜ் கடும் விமர்சனம்! திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களுக்கும் பெயர் சூட்டி வருகிறார். அவரின் பரம்பரை திருவாரூரிலிருந்து சென்னைக்கு எப்படி சென்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ’ஓசி ரயில் கருணாநிதி மகன் ஸ்டாலின்’ என்று நாங்களும் பெயர் வைப்போம். இப்படி தொடர்ந்து அவர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. தனது பதவிக்குரிய மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடைந்து போய்விட்டது: பாஜக மாநில தலைவர் எல்.முருகன்