தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு தேவையான உபரிப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் - அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த உபரி பொருட்கள் இனி தட்டுப்பாடின்றி கிடைக்கும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

By

Published : Apr 11, 2020, 12:06 PM IST

minister kamaraj
minister kamaraj

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதையை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; "இன்றுவரை 96.83 விழுக்காட்டினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுவிட்டது. அத்தியாவசிய பொருட்களை பொறுத்தவரை 60 விழுக்காடு வழங்கப்பட்டுவிட்டது. டோக்கன் யார் யாருக்கு எந்த தேதியில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மட்டும் அவர்கள் ரேஷன் கடைகளில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ்

எந்தப் பணிகளில் ஈடுபட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். விவசாயம் சார்ந்த உபரிப் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான வழிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். உரம், விதை பூச்சிக்கொல்லி, யூரியா போன்றவை இனி தட்டுப்பாடின்றி கிடைக்கும். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விலை பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:அவசர கால பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details