நன்னிலத்தில் முகாம்களை ஆய்வுசெய்த உணவுத் துறை அமைச்சர்! - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா
திருவாரூர்: புரெவி புயல் தாக்கத்தால் நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களைத் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
புரெவி புயல் தாக்கம் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாள்களுக்கு மேலாக பெய்துவரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறிப்பாக நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி, சிறுபுலியூர், பாவட்டகுடி, நாடாகுடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அனைவரும் கொல்லுமாங்குடியில் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.