திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏஐடியுசி மீன்வள தொழிலாளர் சங்கம் சார்பில், நீர்வளத்தையும், மீனவர்களையும் மத்திய மாநில அரசுகள் பாதுகாக்கத் தவறியதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்! - fishermen Association protesting various demands
திருவாரூர்: கடலோர மேலாண்மை மண்டல அறிக்கை 2019யை திரும்பப் பெற வேண்டும், கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைகளை தடை செய்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்வள தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன சங்கம் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலோர மேலாண்மை மண்டல அறிக்கை 2019யை திரும்பப் பெற வலியுறுத்தியும், கடலை தனியார் குத்தகைக்கு விட வழிவகை செய்யும் கடல் மீன் வளர்ப்பு மசோதா 2018 தடை செய்யக்கோரியும், கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைகளை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.