தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - Cows roaming around Thiruvarur Road

திருவாரூர்: மன்னார்குடியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தலா ரூ. 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது

By

Published : Nov 16, 2019, 7:49 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காமல் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதிகள், பிரதான சாலைகள், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விட்டுவிடுகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது
இதையும் படிங்க: சாகும் நிலையில் 230 மாடுகள்! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத் - நடவடிக்கைகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details