திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள திருவாஞ்சியம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளர் காசிநாதன் (60). இவர் தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்லாததால் வீட்டிலிருந்துள்ளார்.
இதனால் செலவுக்குத் தனது மகன் பாலசுப்பிரமணியனிடம் செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். மகன் தற்போது பணம் இல்லை எனக் கூறியதால் மனமுடைந்த தந்தை காசிநாதன் விரக்தியில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.