திருவாரூர்: திருத்துறைப்பூண்டி, பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவ் காந்தி (37) அடிக்கடி மது அருந்தி வந்து, தனது தந்தை பாலுவிடம் (65) தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை.13) காலை சஞ்சீவ் காந்தி வழக்கம்போல் மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாலு தன்னுடைய மகன் சஞ்சீவ் காந்தியை உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளார்.