திருவாரூர்:மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட செயலாளர் பாரதிசெல்வன் இலாரா தலைமையில் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டமான அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், 2020 விவசாயிகள் விலை உத்திரவாத ஒப்பந்த சட்டம் 2020 உள்ளிட்ட சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது. இச்சட்டம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம் டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து உடனே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:'நீ அஞ்சாதே': விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இறங்கிய பாடல்!