தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு! - tiruvarur district news

திருவாரூர்: நன்னிலத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

விவசாயிகள் வெளிநடப்பு
விவசாயிகள் வெளிநடப்பு

By

Published : Dec 1, 2020, 6:18 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் இன்று (டிச.1) காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இதில் 10 வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் அவர்களின் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காணொலி மூலம் இணைக்கப்பட்டனர்.

விவசாயிகள் வெளிநடப்பு

குறைதீர் கூட்டம் தொடங்கியவுடன் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஜி.சேதுராமன், நன்னிலம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா.மணிமாறன் ஆகியோர் தலைமையிலான விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர் வீட்டில் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details