தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னார்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசு

திருவாரூர்: புரெவி புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Relief for farmers
puravi cyclone

By

Published : Dec 23, 2020, 7:38 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் மாநில செயலாளர் வீ.செல்வராஜ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புரெவி புயல் காரணமாக வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் அமைத்து தரவேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:தேர்தலில் வணிகர்கள் ஆதரவு யாருக்கு? - விக்கிரமராஜா விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details