தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் பனிப்பொழிவால் விவசாயிகள் வேதனை! - திருவாரூர் நெல் நேரடி கொள்முதல் நிலையம்

திருவாரூரில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவால் அறுவடை செய்யப்பட நெற்பயிர்கள் ஈரப்பதத்துக்குள்ளாவதால், நேரடி கொள்முதல் நிலையத்தில் அலைக்கழிக்கப்படுவர் என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருவாரூரில் பனிப்பொழிவால் விவசாயிகள் வேதனை!
திருவாரூரில் பனிப்பொழிவால் விவசாயிகள் வேதனை!

By

Published : Jan 23, 2022, 10:29 AM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு சுமார் 3.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா உள்ளிட்டப் பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

பல இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அத்துடன் அறுவடை செய்து மூடி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் பனிப்பொழிவால் நனைந்து வருகின்றன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதத்தைக் காரணம் காட்டி அலைக்கழிப்பார்கள் என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இதில் ஒரு சிலர் பால்கட்டி வரும் கதிர்களில் உள்ள பூச்சித் தாக்குதல்களை பனிப்பொழிவு குறைத்து வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

ABOUT THE AUTHOR

...view details