திருவாரூர்:நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
இந்நிலையில், மழை விட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில்,சுமார் 500 ஏக்கர் அழுகிய நெற்பயிர்களை, அப்புறப்படுத்தி நிலங்களை மறு சீரமைப்பு செய்துவிட்டபின், மீண்டும் மூன்றாவது முறையாக நேரடி நெல் விதைப்பிலும், நடவுப்பணிகளையும் விவசாயிகள் செய்து வருகின்றனர்.
மூன்றாம் நடவுப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள் இதில் குறிப்பாக ஆண்டிப்பந்தல், நெம்மேலி, அதம்பாவூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் விவசாயிகள் மூன்றாம் நடவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும்; அதற்கான நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?