திருவாரூர்:இந்தாண்டு மூன்று லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பனி பெய்து வருவதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு சென்றால் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் காரணம் காட்டி அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.