தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் வைக்கோலை அரசே நேரடி கொள்முதல் செய்ய கோரிக்கை - நெல் வைக்கோல் நேரடி கொள்முதல்

திருவாரூர்: அறுவடை செய்த நெல் வைக்கோல்களை தமிழ்நாடு அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

farmers Request to government for direct purchase of paddy straw
farmers Request to government for direct purchase of paddy straw

By

Published : Feb 21, 2021, 5:04 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் மூன்று லட்சத்து 70 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா தாளடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை பணிகள் முடிவுற்று வைக்கோல் கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வைக்கோல்களை, கொள்முதல் செய்யும் தனியார் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கட்டு ஒன்று 20 முதல் 25 ரூபாய்வரை பெறுகின்றனர்.

ஆனால், அதனை வெளி மாநிலங்களில் 200 முதல் 300 ரூபாய்வரை விற்பனை செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

வைக்கோலை அரசே நேரடி கொள்முதல் செய்யக் கோரிக்கை

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, வைக்கோலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details