தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட கோரிக்கை!

திருவாரூர்: நன்னிலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

paddy centre close
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட கோரிக்கை

By

Published : Mar 8, 2021, 2:45 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவம் நடைபெற்றது. அறுவடை முடிந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அவை கொள்முதல் செய்யப்படுகின்றன. இதையடுத்து, விவசாயிகள் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அறுவடை பணிகள் முடிவடைந்தும் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அங்கு வெளிமாவட்ட, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நெல் மூட்டைகள் உள்ளூர் விவசாயிகளின் பெயரில் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் பயிர் காப்பீட்டுத் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்ளூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் நெல் அறுவடை பணிகள் முடிவுற்ற இடங்களில் ஆய்வு செய்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்க வழி வகை செய்யும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பெரியார் சொன்னதை... சீமான் செய்கிறார் - மகளிர் தினத்தில் மகத்தான பரிசு!

ABOUT THE AUTHOR

...view details