திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் தமிழகஅனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் - மன்னார்குடியில் எடியூரப்பாவின் உருவபொம்மை எரிப்பு
திருவாரூர்: மன்னார்குடியில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவைக் கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து
ஆர்ப்பாட்டத்தின்போது, கர்நாடகாவில் ‘மேகதாது அணை கட்டியே தீருவேன்’ எனச் சவால்விடும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவபொம்மையை கொளுத்தி கர்நாடக முதலமைச்சருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோட்டூர் ஒன்றியச் செயலாளர் ராவணன், ஒன்றியத் தலைவர்
வீரசேகர் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.