தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு - District collector Anandi

திருவாரூர்:  2019 -20 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

farmers petitioned the District Collector in thiruvarur
farmers petitioned the District Collector in thiruvarur

By

Published : Aug 31, 2020, 7:17 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2019 -20 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் விவசாயிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், திருவாரூர் அருகே உள்ள கானூர், அன்னவாசல், தேவகண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2019-ம் ஆண்டில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் போதுமான மகசூல் இல்லாத நிலை உருவானது.

இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்து வருகிறோம். ஆனால் கடந்த 2019 -சம்பாவிற்க்கான பயிர் காப்பீட்டு கட்டணம் வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளையில் உள்ள உரிய நேரத்தில் பணம் செலுத்தியும் கானூர் தேவகண்டநல்லூர், உள்ளிட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை ஆனால் எங்கள் பகுதியை சுற்றியுள்ள குளிகரை, பெருந்தரக்கூடி, ஆணைவடபாதி, அம்மையப்பன், உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளுக்கும் 2019-ஆண்டிற்க்கான பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியரும், வேளாண் துறை அலுவலர்களும் இதை கவனத்தில் கொண்டு 2019-ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details