திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் இரண்டு முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் குணமடைந்த நிலையில் இரண்டு மாதத்திற்குப்பின் இன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஜூன் 12- குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன்பாக பாசன வாய்க்கால்கள் அனைத்தையும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசு காவிரி ஆணையத்தின் செயல்பாட்டை மத்திய ஜல்சக்தி துறையுடன் இணைந்ததை கைவிட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 2019- 20ஆம் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் கார்டு அடிப்படையில் முகக்கவசம் அனைத்து குடும்ப அட்டைகள் உள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர் கூட்டத்தில் கோரிக்கைகளை அடுக்கிவைத்த திருவாரூர் விவசாயிகள்! - திருவாரூர் விவசாயிகள்
திருவாரூர்: ஜூன் 12-தண்ணீர்த் திறப்பதற்கு முன்பாக பாசன வாய்க்கால் அனைத்தையும் கூடுதல் நிதி ஒதுக்கி தூர்வார வேண்டும், விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.
thiruvarur district
இதையும் படிங்க: சொமாட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கிய அமேசான்!