திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கர்ணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கியது. இதைக் கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் போராட்டம் செய்துவருகின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தூக்கு மாட்டி விவசாயிகள் போரட்டம்! - திருவாரூர்
திருவாரூர்: மன்னார்குடி அருகே கர்ணாவூர் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வயலில் தூக்கு மாட்டி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி அருகே கர்ணாவூர் கிராமத்தில் வயலில் இறங்கி தூக்கு மாட்டும் போராட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கு மேற்ப்பட்டோர் ஈடுபட்டனர். அப்போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இத்திட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்திட வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் உயிரை கொடுத்தாவது இத்திட்டத்தினை தடுத்து நிறுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.