திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 17 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பருத்தி எடுக்கும் பணி பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளது. விவசாயிகள் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தங்களது விளைபொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். விதைப்பில் தொடங்கி பல்வேறு நிலைகளைக் கடந்து, அறுவடை செய்யும் வரை வெற்றிகரமான விளைச்சலுக்கு உத்தரவாதம் இல்லை.
பருத்தியில் இதுபோன்ற பின்னடைவுகள் இன்னும் அதிகம். நாளுக்கு நாள் விலை மாறிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் கடந்தாண்டு ஒரு குவிண்டால் பருத்திக்கு 5 ஆயிரத்து 800 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்தது. கிலோ ஒன்றுக்கு 25 முதல் 30 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.