தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், கடந்த ஆண்டு சம்பா பருவத்தின்போது, ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் காரணமாக விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வேளாண்மைத் துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு குறித்த ஆய்வு செய்தது.
அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் பரவலாக இந்தக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். அதன்படி 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் தென்பட்டதாக அரசுக்கு பட்டியல் அனுப்பியுள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ச்சியாக வேளாண்மைத் துறையின் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதால், அரசு ஏற்கனவே அறிவித்தபடி கணக்கெடுப்பு செய்தவுடன் நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை.