திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் நோக்கி நாட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய காளியாகுடி பாசன வாய்க்கால் காளியாகுடி, சிக்கல், சங்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த வேளாண் நிலத்திற்கு நீராதாரமாக உள்ளது.
இந்த நிலையில் காளியாகுடி பாசன வாய்க்கால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால், இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டதாக அப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் 80 விழுக்காட்டினர் சிறு விவசாயிகள்தான். காவிரியை நம்பித்தான் சாகுபடி செய்துவருகின்றனர்.
ஆனால், மேட்டூரிலிருந்து திறப்படும் தண்ணீர் பாசன வாய்க்கால்களுக்கு வருவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் இந்தப் பாசன வாய்க்காலை முழுமையாகத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை!