திருவாரூர்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாவட்ட தலைவர் அழகர்ராஜ், "புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு தொகையினை 60 தினங்களுக்குள் வழங்க வேண்டும் என பிரதம மந்திரி திட்டத்தின் விதிகளின்படி, உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
புரெவி புயல் மற்றும் மழை காரணமாக திருவாரூர் மாவட்ட ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வீடுகளை இழந்தவர்களுக்கும் அரசு பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும். ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் கரைகளை பலப்படுத்த வேண்டும்.