திருவாரூர்:மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பிரதானத் தொழிலாகக் கொண்டு விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பா, தாளடி, குறுவை, கோடை சாகுபடியான பருத்தியும், பயறு உளுந்து வகைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலையில், அதற்கு அதிகளவில் போர்வெல் உபயோகித்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள், "திருவாரூர் மாவட்டத்தில் பிரதானத் தொழிலான விவசாயம்தான் இருக்கிறது. அதன் முக்கியமான ஆதாரமாக மேட்டூர் தண்ணீரை நம்பியே 60 விழுக்காடு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மீதமுள்ள 40 விழுக்காடு விவசாயிகள் போர்வெல் கொண்டு சாகுபடி செய்து வருகிறோம்.