திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்தனர். அவற்றின் அறுவடை முடிவடைந்த நிலையில், அப்பகுதி விவசாயிகள் பண பயிரான பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக அதிக மகசூல் தரக்கூடிய கங்கா காவேரி, மணி மேக்கர், 6CH 659, J2 RCC, உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
நெல் அறுவடை முடிவு: பருத்தி சாகுபடியில் திருவாரூர் விவசாயிகள் - thiruvarur cotton cultivation
திருவாரூர்: நெல் அறுவடை முடிவடைந்த நிலையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
thiruvarur
நெல் அறுவடையில் மஞ்சள் நோய் தாக்குதல், இலைச்சுருட்டு தாக்குதல், புகையான் நோய் தாக்குதல் உள்ளிட்டவைகளால் இந்தாண்டு விவசாயிகளுக்கு லாபம் இல்லாமல் போய்விட்டதால், அதனை பருத்தி சாகுபடியில் சரிகட்ட இதில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.