தமிழ்நாடு

tamil nadu

கோட்டாட்சியரிடம் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்

திருவாரூர்: கோட்டாட்சியரிடம் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம் செய்ததால், சோழங்கநல்லூர் கிராம மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

By

Published : Feb 27, 2020, 7:05 AM IST

Published : Feb 27, 2020, 7:05 AM IST

விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்
விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர் மாவட்டம் கோட்டுர் அருகே சோழங்கநல்லூர் பகுதியில் ONGC நிறுவனம், ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது. அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் சோழங்கநல்லூர் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதற்க்கு, மன்னார்குடி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை அழைத்தனர். அதன் பின்பு, ONGC அலுவலர்கள் முன்னிலையில் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற இருந்தது.

வாக்குவாதத்தில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

அப்போது, அந்த வழியாக சென்ற விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து கூட்டம் நடத்தக் கூடாது எனவும், இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடை செய்ய வேண்டும் எனவும், மேலும் தான் புகார் அளித்த நிலையில் தன்னை ஏன் அழைக்கவில்லை எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, வரும் 7ஆம் தேதி முதலமைச்சருக்கு, திருவாரூரில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்நேரத்தில் இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என கூறியதால், ONGCக்கு எதிரான சோழங்கநல்லூர் போராட்டக்கார்களுக்கும் பி.ஆர்.பாண்டியனுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியார், கூட்டத்தை ஒத்தி வைத்ததால் பி.ஆர் பாண்டியனுக்கு, சோழங்கநல்லூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சாம்பல் புதன்: குமரி கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details