திருவாரூரில் சட்ட விரோதமாக செயல்படும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ஆனந்தை சந்தித்து காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மனு அளித்தார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக தோண்டப்படும் எண்ணைக் கிணறுகளை தடுத்து நிறுத்தி வெளியேற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் ஓஎன்ஜிசி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2016ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது. உடனே கிணறு அமைக்கும் பணியை கைவிட்டு வெளியேற வேண்டும் என எழுத்துப்பூர்வமாக உடன்பாடு ஏற்பட்டதால் பெரியகுடி கிராமத்தில் மட்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் பணியை நிறுத்திவிட்டு வெளியேறியது.
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள் எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு சோழிங்கநல்லூரில் சட்டவிரோதமாக கிணறு அமைத்து ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தைத் தடுத்து நிறுத்தி வெளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளித்தோம். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உறுதியளித்தார்" என்றார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு மனோவியாதி' - எம் பி ரவீந்திரநாத் குமார் விமர்சனம்