திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் நோக்கி ஓடும் நாட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய குரூஸ்தானம் பாசன வாய்க்கால், கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.
இதனால் தற்போது வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய விவசாயிகள்
'கடந்த 20 ஆண்டுகளாக குரூஸ்தானம் வாய்க்கால் தூர்வாரப்படாததால், இவ்வாய்க்காலை நம்பியுள்ள பண்டாரவடை, வல்லங்கிளி, பாவட்டக்குடி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறாமல் தவித்து வருகின்றன.