திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 2019-20ஆம் ஆண்டில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது வேளாண் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 763 வருவாய் கிராமங்களில் 527 கிராமங்களுக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 514 வருவாய் கிராமங்களில் 147 கிராமங்களுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 573 வருவாய் கிராமங்களில் 360 கிராமங்களுக்கும் தன் விருப்பு வெறுப்பிற்கேற்ப இழப்பீடு நிர்ணயம் செய்துள்ளனர். மீதமுள்ள 916 கிராமங்களுக்கு இழப்பீடு சுழியம் என கணக்கிட்டு மோசடி செய்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் அனைத்து கிராமங்களிலும், ஆணை கொம்பன் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டது நிலமை இவ்வாறு இருக்க காப்பீட்டு நிறுவனம் தன் விருப்பத்திற்கு இழப்பீடு நிர்ணயம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது.