திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் அருகேவுள்ள அபிஷேக கட்டளைக் கிராமம் தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், தனக்குச் சொந்தமான 53 நெல் மூட்டைகளை ஸ்ரீவாஞ்சியத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக, கடந்த பிப்.15ஆம் தேதி வைத்துள்ளார்.
நெல் வைத்து ஒரு வாரம் ஆன நிலையிலும், நெல் மூட்டைகள் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அங்கு பணிபுரியும் அலுவலர்களிடம் கேட்டபோது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குப் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள், விவசாயி அசோக்குமாரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.