தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூர்வாரப்படாததால் காணாமல் போன நாட்டாறு பாசனக்கால்வாய்: விவசாயிகள் வேதனை! - kollumaangudi naataru

திருவாரூர்: கொல்லுமாங்குடி பகுதியில் ஓடும் நாட்டாறு பாசனக் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கால்வாய் இருந்த தடம் தெரியாமல் போய்விட்டதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய், நாட்டாற்றை தூர்வாரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்  திருவாரூர் செய்திகள்  thiruvarur news  கொல்லுமங்குடி நாட்டாறு  kollumaangudi naataru
தூர்வாரப்படாததால் காணாமல் போன நாட்டாறு பாசனக்கால்வாய்: விவசாயிகள் வேதனை

By

Published : Jul 5, 2020, 10:14 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கொல்லுமாங்குடியில் நாட்டாறு என்ற ஆறு செல்கிறது. இந்த ஆற்றினால், சிறுபுலியூர், பாவட்டக்குடி, நாடாக்குடி, நெடுங்குளம், கடகம், வேலங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.

இந்நிலையில், தற்போது பாசனத்திற்கு மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் நாட்டாற்றை வந்தடைந்தது. ஆனால், டெண்டர் விடப்பட்டும் இந்த ஆறு தூர்வாரப்படாததால் ஆற்றில் கருவேலமரங்கள், காட்டாமனக்கு, கோரைகள் மண்டிக் காட்சியளிக்கின்றன.

தூர்வாரப்படாததால் காணாமல் போன நாட்டாறு பாசனக்கால்வாய்

"25 ஆண்டுகளாக பாசன வாய்க்கால்கள் தூர்வாராமல் இருந்ததால் வாய்க்கால்களின் தடம் தெரியாமலேயே போய்விட்டது. இந்த முறை தண்ணீர் வரும் என்று எண்ணி விவசாயிகள் நடவு நட்டுள்ளனர். தண்ணீர் வராததால் நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிறு, குறு பாசன கால்வாய்களை முழுமையாக தூர்வாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:'மலையாய் குவிந்துகிடக்கும் தேங்காய்கள்; இப்போ நட்ட பிள்ளயும் சோறு போடல' - வேதனைப்படும் தென்னை விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details