தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கு தட்டுப்பாடு; 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகளுக்கும் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்

திருவாரூர்: திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு தட்டுப்பாடு காரணமாக விவசாயிகளின் 10,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

10,000-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள்
10,000-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள்

By

Published : Feb 26, 2020, 7:20 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் இயந்திர தட்டுப்பாடு காரணமாக தாமதமாக நடைபெற்றுவருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெற்களை விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுவதாலும், போதிய இட வசதி இல்லாத காரணத்தாலும் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

விவசாயி ஒருவரின் குமுறல்

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த நான்கு நாட்களாக சாக்கு தட்டுப்பாடு காரணமாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விவசாயி அண்ணாதுரை பேட்டி

இதுகுறித்து விவசாயிகள் உயர் அலுவலர்களிடம் கேட்கும்போது அவர்களை அலுவலர்கள் தரக்குறைவாகவும், தகாத வார்த்தையில் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டின் விவசாயத்துறையில் உள்ள பிரச்னைகள் - ஆய்வறிக்கை வெளியீடு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details