திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடைபெற்று வரும் துணை மின் நிலைய பணிகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "2011ஆம் ஆண்டுக்கு முன்னர் மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த மின்சாரத் தேவை 16 ஆயிரத்து 151 மெகாவாட் என்ற நிலையில் தற்போது 18ஆயிரத்து 656 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தியில் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. இதனால், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.