திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார்.
தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் இதையடுத்து, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், இன்று சித்திரையூர், வடவேர்குடி, ஆதிவிடங்கம், மணக்கரை, புள்ளமங்கலம், கீழ மணலி, சேந்தங்குடி உள்ளிட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் அப்போது, 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம் இறங்கி சென்று திமுக ஆட்சியின்போது செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தியும் உடனடியாக சம்பளத்தை வழங்கும் திட்டத்தையும் திமுக செயல்படுத்தும் எனவும் பரப்புரை மேற்கொண்டார்.
தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் மேலும், தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பூண்டி கலைவாணன் கேட்டுக் கொண்டார். இந்த பரப்புரையின்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.