தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை! - ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை

நன்னிலம் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை
தேர்தல் பறக்கும் படை

By

Published : Feb 10, 2022, 3:21 PM IST

திருவாரூர்:தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி தலைமையிலான குழுவினர் பேரளம் டு காரைக்கால் சாலையில் உள்ள பண்டாரவாடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த மன்னார்குடி காரியமங்கலம் முகமதியர் தெரு சகாபுதீன் என்பவரது மகன் முகமது இர்ஃபான் (22) ஆவணமின்றி 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாய் எடுத்துவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி SSI சிவானந்தம் பணத்தைக் கைப்பற்றி பேரளம் பேரூராட்சியில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் - காவல் துறையினருக்கு எடப்பாடி எச்சரிக்கை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details