திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இடும்பாவனம் சர்வமானியம் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்கள் தொகை 925 பேரில் 450 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில் உள்ள வாக்காளர்கள். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது. தற்போது பெய்த கனமழையில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியே பயணிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகக் கூறி கறுப்புக் கொடியுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்! - தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள்
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சாலையை சீரமைக்கக்கோரி பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி கறுப்புக் கொடியுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த சாலையை சரிசெய்யக் கோரி இப்பகுதி மக்கள் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர். இதனால் கோபமடைந்த சர்வமானியம் கிராம மக்கள் குண்டும் குழியுமாக உள்ள சாலை பள்ளங்களில் குளம் தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வார்டு மறுவரையறையில் குளறுபடி - தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!