திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வீரவடி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் பானுமதி (50). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெரிய மகன் ராஜராஜன்(30). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இளைய மகன் ஆனந்தராஜ்(26) திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அதேபோல் இன்று இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு சாப்பட்டிற்காக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அண்ணன் ராஜராஜன் அருகிலிருந்த கத்தியை எடுத்து தம்பி ஆனந்த்ராஜை குத்திவிட்டார். உடனே ரத்த வெள்ளத்திலிருந்த தம்பியை பூந்தோட்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தம்பி ஆனந்தராஜ் உயிரிழந்தார்.
இது குறித்து தாயார் பானுமதி கேட்டபோது, இருசக்கர வாகன விபத்தில் தம்பி இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், ஆனந்த்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அண்ணன், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கத்திக் குத்து வாங்கிய காவலர்கள் - பிடிபட்ட கஞ்சா வியாபாரி