தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐந்து மாதங்கள் ஆகியும் அகற்றப்படாத மின் கம்பங்கள் - விவசாயிகள் வேதனை - EB post fell down in farm land

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயல் தாக்கியதில் விவசாய நிலத்தில் விழுந்த மின்கம்பங்கள் ஐந்து மாதங்கள் ஆகியும் அகற்றப்படாமல் இருப்பதால் உழவுப் பணிகள் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மின்கம்பங்கள்

By

Published : May 6, 2019, 8:08 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை கஜா புயல் தாக்கியதில் நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தது.

கஜா புயலின்போது விழுந்த மின்கம்பங்கள்

கஜா புயலால் தென்னை, மாமரம், வாழைமரம் போன்ற பல்வேறு மரங்களும், மேலும் சாலையோரத்தில் நிழல் தரும் மரங்கள் என ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. அதேபோல் திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சேதமானது. முக்கிய சாலை பகுதிகளில் விழுந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்ய ஒரு மாதத்திற்கு மேலானது.

விவசாய நிலத்தில் விழுந்த மின்கம்பங்கள்

இந்நிலையில் விவசாய நிலங்களில் விழுந்த மின் கம்பங்கள் இன்றுவரை அகற்றப்படாததால் உழவு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் வாரிய அலுவலர்கள் கஜா புயலால் விவசாய நிலங்களில் விழுந்து கிடக்கும் மின் கம்பங்களை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன

ABOUT THE AUTHOR

...view details