திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வர்த்தக சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வர்த்தக சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், “தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பத்திரிகை, ஊடக விளம்பரங்கள் மூலமாக கோடிக்கணக்கில் செலவு செய்து வியாபாரங்கள் மேலே வரும் இச்சூழலில், இந்த ஆன்லைன் வர்த்தகம் சாதாரண மனிதர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றது. இதனை ஒன்றிய மாநில அரசுகளுக்கு ஊக்கப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்குள் ஜிஎஸ்டி வரி கட்டாமல் வியாபாரிகளையும் காலி செய்துவிட்டு பொதுமக்களுக்குத் தரக்கூடிய பொருள்கள் சேதம் ஏற்பட்டால் அதனை மாற்றித் தராமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது ஆன்லைன் வர்த்தகம். தமிழ்நாட்டில் இருக்கின்ற 37 லட்சம் வியாபாரிகள் தொடர்ச்சியாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் தடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை