திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாத்தூர், பழையாறு, வேலங்குடி, சங்கமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பாசன வாய்க்கால்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மோலாக தூர்வாரப்படாததால் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் புதர் மண்டி காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படாததால் இந்த விளை நிலங்கள் அனைத்தும் தரிசாக மாறியுள்ளன. ஆனால் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டும் அந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா என்ற ஏக்கத்துடன் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தற்போது இந்த பாசன வாய்க்கால்கள் இடம் தெரியாமல் போய்விட்டன. இவற்றை நம்பி இருந்த 500 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறியதோடு கருவேல மரங்கள் பல வளர்ந்து இந்த நிலங்கள் உழவு செய்வதற்கான தன்மை இழந்து நிற்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.