திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த0 தொண்டியக்காடு பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்காக செயல்பட்டு வந்த ரேஷன் கடை கஜா புயலால் சேதமடைந்ததையடுத்து, அக்கடை தொண்டியக்காடு பகுதியில் மாற்றியமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீண்டும் ரேஷன் கடையை அலுவலர்கள் மாற்றியமைக்கப் போவாதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட கட்டடம் பாதுகாப்பான முறையில் இல்லை எனவும், புதிய இடத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடை கிராமத்தின் மையப் பகுதியில் உள்ளதால் பாரபட்சமின்றி தொடர்ந்து அதே இடத்தில் செயல்படுத்தக் கோரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டையுடன் இடும்பாவனம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.