திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வாக்குப்பதிவு மையத்தின் அருகே அதிமுகவைச் சார்ந்த மகேந்திரனை, திமுகவைச் சேர்ந்த நபர்கள் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மகேந்திரனுக்கு கை, கால், கழுத்துப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.